குழாயில் தண்ணீர் வருவது போல் கட்டுக்கட்டா கொட்டிய ரூ.40 லட்சம்.! சிக்கிய பொதுப்பணித்துறை அதிகாரி

0 3659

கர்நாடகாவில் லஞ்சமாக வாங்கிய பணத்தை பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தண்ணீர் பைப்புக்குள் மறைத்து பதுக்கி வைத்திருந்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அம்மாநிலத்தில் அரசு அலுவலகம், அதிகாரிகள் வீடுகள் என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளரான சாந்தகவுடா என்பவரது வீட்டிலும் சோதனை நடந்தது.

அப்போது, எதேச்சியாக தண்ணீர் பைப்பை திறந்து பார்த்த போது, தண்ணீர் வராததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் பிளம்பரை வரவழைத்து பைப்பை அறுத்துள்ளனர்.

அப்போது, கட்டுக்கட்டாக பணம் வந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பைப்புக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40லட்சம் ரூபாய் பணத்தை பக்கெட்டை வைத்து பிடித்து பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, சாந்தகவுடா விடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments