ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கிலோ 85 முதல் 100 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதாக அறிக்கை ஒன்றில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தக்காளி மற்றும் இதர காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளிலும் காய்கறி மற்றும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
Comments