பெங்களூருவில் இருந்து டாரஸ் லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக புதுச்சேரிக்கு லாரியில் கடத்தி செல்லப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், மத்திய பிரதேச மாநில பதிவு எண் கொண்ட டாரஸ் லாரியை சோதனை செய்ததில் அதில், 35 லிட்டர் அளவு கொண்ட 600க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கேன்களில் எரிசாராயம் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலேந்திரசிங் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments