உகாண்டா பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர்கள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து

0 2182

உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

உகாண்டாவில் கடந்த 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்ற பாரா பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு மொத்தமாக 45 பதக்கங்கள் கிடைத்த நிலையில், அதில் தமிழக வீரர்கள் மட்டும் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

போட்டி முடிந்து தாயகம் திரும்பிய தமிழக வீரர்கள் தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து தர முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments