சாம்பியன்ஸ் லீக் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட்

0 36869
சாம்பியன்ஸ் லீக் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடெட்

ஆட்டம் நிறைவடையும் தருவாயில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோலால் மான்செஸ்டர் யுனைடெட் அணி, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

தொடர் தோல்விகளால் மேலாளரை அதிரடியாக நீக்கிய மான்செஸ்டர் யுனைடெட் அணி, வாழ்வா சாவா என்ற நிலையில் வில்லாரியல் அணியை எதிர்கொண்டது. முதல் பாதியில், வில்லாரியல் வீரர்கள் கோல் அடிக்க எடுத்த அத்தனை முயற்சிகளையும் மான்செஸ்டர் கோல் கீப்பர் சாமர்ர்த்தியமாகத் தடுத்தார்.

78வது நிமிடத்தில் எதிரணி வீரரிடம் இருந்து லாவமாக பந்தை தட்டிச் சென்ற ரொனால்டோ மின்னல் வேகத்தில் கோல் அடித்தார். கடைசி நிமிடத்தில் சான்சோ  மற்றொரு கோல் அடிக்க, மான்செஸ்டர் யுனைடெட் 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் வில்லாரியலை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments