மறைந்த முன்னாள் திமுக நகர்மன்ற உறுப்பினர் பத்மநாபன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
மதுராந்தகம் காந்திநகர் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பத்மாநாபன் வீட்டில் சென்னை அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் நகர்மன்ற திமுக உறுப்பினர் பத்மநாபனின் மகன் சுதாகரன். இவர் சென்னை துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிறுவன பணபரிவர்த்தனைகள் தொடர்பாக மதுராந்தகத்திலுள்ள அவரது வீட்டில் காலை 7 மணி முதல் நடந்து வரும் சோதனையில், 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
Comments