வேளாண் சட்டங்கள் வாபஸ் ; கேபினட் ஒப்புதல் எனத் தகவல்
3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதற்கான நடைமுறைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்றும் அதற்கான சட்டரீதியிலான நடைமுறைகள் தொடங்கும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் நடைமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அந்த சட்டங்களை திரும்பப்பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஏழை மக்களுக்கு ரேசனில் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
Comments