பூமியை நோக்கி வரும் விண் கல்லின் பாதையை திசைமாற்றும் சோதனையில் நாசா!

0 4021

விண்கலத்தை மோதவிட்டு பூமியை நோக்கி வரும் விண் கல்லின் பாதையை  திசைமாற்றும் சோதனையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஈடுபட்டுள்ளது.

சுமார் ஆறரை கோடி  ஆண்டுகளுக்கு முன் மிக பெரிய விண்கல் பூமி மீது விழுந்ததில் டைனோசர்  உட்பட பல உயிரினங்கள் அழிந்தன. 10 முதல் 20 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்ற நிகழ்வு நடப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்நிலையில், அப்படி ஒரு அழிவை தடுக்க DART என்றழைக்கப்படும் Double Asteroid Redirection Test என்ற சோதனையை செய்ய கலிஃபோர்னியாவின் Vandenberg விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணுக்கு சென்றது.

இந்த விண்கலம் near earth objects என்று அழைக்கப்படும் பூமிக்கு மிக அருகில் சுற்றும் விண்கற்களில் ஒன்றான Dimorphos என்னும் விண்கலம் மீது மணிக்கு சுமார் 24 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதி அதன் சுற்று வட்ட பாதையை மாற்றி அமைக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments