ஆடு திருடர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய்க்கான நிதியுதவியை வழங்கினார் முதலமைச்சர்

0 4401

ஆடு திருடர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட திருச்சி நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில் பூமிநாதன் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறியதோடு, நிதியுதவிக்கான காசோலையை பூமிநாதனின் மனைவி கவிதாவிடம் முதலமைச்சர் வழங்கினார். கடந்த சனிக்கிழமை இரவு ஆடு திருடர்களை விரட்டிச் பிடிக்கச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், நடுரோட்டில் வைத்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பூமிநாதனின் மகன் குகன்பிரசாத், விரைவில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments