பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டு புகார்களை தெரிவிக்கும் முறையை எளிதாக்க திட்டம் ; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

0 2441
பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டு புகார்களை தெரிவிக்கும் முறையை எளிதாக்க திட்டம்

பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார்களை தெரிவிக்கும் முறையை எளிதாக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில், திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் விருப்பு மனுக்களை வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் புகார்களை தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு பள்ளியின் புகார் பலகையிலும் 14417 மற்றும் 1098 என்ற புகார் எண்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் எனவும், அதுமட்டுமல்லாமல் அருகில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணையும் பதிவிட வேண்டும் என கூறினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments