தாய்க்கு தெரியாமல் குழந்தை தத்து கொடுக்கப்பட்ட விவகாரம் ; மரபணு சோதனையின் மூலம் தனது குழந்தைதான் என்று உறுதி செய்த தாய்

0 6899
மரபணு சோதனையின் மூலம் தனது குழந்தைதான் என்று உறுதி செய்த தாய்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 23 வயது இளம் தாய் அனுபமா சந்திரன் தமது குழந்தை தமக்கு தெரியாமல் தத்து கொடுக்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் மரபணு பரிசோதனை அவருக்கு சாதகமாக உள்ளது.

அந்தக் குழந்தை அனுபமாவின் குழந்தைதான் என்று உறுதி செய்யப்பட்டது. ஆந்திர தம்பதியிடம் தத்து கொடுக்கப்பட்ட அந்தக் குழந்தையை போலீசார் மீட்டனர். கேரள மாநில குழந்தைகள் நல்வாழ்வு சட்டக்குழு குழந்தையை ஆஜர்ப்படுத்தி தாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்ட குழந்தைக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments