அருப்புக்கோட்டை அருகே தொடர் திருட்டில் ஈடுபடும் மிளகாய் பொடி திருடன்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் மிளகாய் பொடி திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
காந்திநகரைச் சேர்ந்த கமலா என்பவர் வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் நகை, பணம் இல்லாததால் தடயம் கிடைக்காமல் இருப்பதற்காக மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளான்.
இதேபோல் கடந்த 19 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் வீட்டிலும் 2லேப்டாப்களையும், மருத்துவர் வீட்டில் இருந்த ஒரு ஆண்ட்ராய்டு டிவியையும் திருடிச் சென்றதாக தெரிய வருகிறது.
Comments