ஜெய்சல்மர் பாலைவனப் பகுதியில் நடைபெறும் இந்திய ராணுவத்தின் மிகப் பெரிய அளவிலான ராணுவ போர்ப் பயிற்சி
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களையொட்டிய ஜெய்சல்மர் பாலைவனப் பகுதியில் இந்திய ராணுவத்தின் மிகப் பெரிய அளவிலான ராணுவ போர்ப் பயிற்சி நடைபெற்று வருகிறது.
கடற்படை, ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 30 ஆயிரம் வீரர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர். நவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவது, அவசர கால நடவடிக்கைகள், தற்காப்பு உத்திகள், உக்கிரமான போர் தாக்குதல்கள் என்று பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
வரும் 26 ஆம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்தப் போர் பயிற்சிகளை நேரில் பார்வையிடுகிறார். முன்னதாக குஜராத் மாநிலம் கட்ச் தீபகற்ப பகுதியில் நடைபெற்ற கடல்பயிற்சியில் கடற்படை, கடலோர காவல்படை, மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.
Comments