பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
எல்லைக் காவல் படையின் செயல் வரம்பு - எல்லையில் இருந்து 50 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் இது 15 கிலோ மீட்டராக இருந்தது.
ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்பது அந்த மாநில அரசின் பொறுப்பாகும். அதில் எல்லைக் காவல் படைக்கு இடமில்லை என்று கூறும் மம்தா பானர்ஜி இது பற்றி பிரதமருடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments