கொரோனா மூன்றாவது அலை முதல் இரண்டு அலைகளைப்போல தீவிரமானதாக இருக்காது - எய்ம்ஸ் இயக்குனர்
கொரோனா மூன்றாவதுஅலை முதல் இரண்டு அலைகளைப்போல தீவிரமானதாக இருக்காது என்று ஏய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
543 நாட்களில் மிகக் குறைந்த அளவிலான புதிய பாதிப்புகளை நாடு கண்டது. பத்தாயிரத்துக்கும் கீழே பாதிப்புகள் குறைந்து வருவதால் இந்திய மக்கள் மெல்ல கொரோனாவில் இருந்து விடுபட்டு வருகின்றனர். இதுவரை 118 கோடி டோஸ்களுக்கு மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதால் நல்ல பலன் ஏற்பட்டிருப்பதாக ஏய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது அலை தீவிரமாக இருக்காது என்பதுடன் இதுவே கொரோனாவுக்கு முடிவு கட்டும் அலையாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Comments