தமிழகத்தில் நவ.26, 27 ஆகிய தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு ; வானிலை ஆய்வு மையம்

0 4223
தமிழகத்தில் நவ.26, 27 ஆகிய தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு ; வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என எச்சரித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் நாளை முதல் சனிக்கிழமை வரை அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் மிக முதல் அதிகனமழைக்கும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது.

வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்திள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments