இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு
இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் குளிர்காலத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத் தொடரில் சுமார் 26 மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் வங்கி சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அறிவித்தார்.
வங்கிகளின் முதலீட்டுக் குறைப்பு நடவடிக்கையின் மூலம் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைத் திரட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
Comments