பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் ; 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கு ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்ப்பு
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம், ஓராண்டை நிறைவு பெற்ற நிலையில், அந்த சட்டங்களை திரும்ப பெற்று கொள்வதாக கடந்த 19 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
இதற்கான மசோதா, இம்மாதம் 29 ஆம்தேதி தொடங்கும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தார். இதன்படி 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மசோதாக்கள், குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
Comments