மாணவர்கள் பொறியியல் படிப்புகளை தமிழில் படிக்க வேண்டும் - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்
மாணவர்கள் பொறியியல் படிப்புகளை தாய்மொழியான தமிழில் படிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தமிழில் கற்பதன் மூலம் நன்றாக உள்வாங்கி படிக்க முடியும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
பொறியியல் படிப்புக்கான புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த பின் பேசிய அவர், தாய் மொழியில் மாணவர்கள் படிப்பதன் மூலம் வருங்காலத்தில் அவர்கள் தொழில் நிபுணர்களாக உருவாக வழிவகுக்கும் என்றும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறு மதிப்பீட்டிற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக குழு அமைத்து பரிசீலிக்கப்படும் என்றும் துணைவேந்தர் குறிப்பிட்டார்.
Comments