காவிரியாற்றில் மீன்பிடிக்க தோட்டா வெடி வீசி கையிலேயே வெடித்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர்
நாமக்கல் மாவட்டத்தில், காவிரியாற்றில் வலையில் மீன் சிக்காததால், தோட்டா வெடி வீசி மீன் பிடிக்க முயன்ற போது ஏற்பட்ட வெடி விபத்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
தோட்டா வெடியை தண்ணீரில் வீசினால், அதன் அதிர்வில் மீன்கள் மேலே வரும் என்றும், அப்போது, மீனவர்கள் சுலபமாக மீன்களை பிடிக்க இயலும் என்றும் கூறப்படுகிறது.
இந்த மீன்பிடிக்கும் முறை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சாணார்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான லட்சுமணன், காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக தோட்டா பற்றவைத்து வீச முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது லட்சுமணன் கையிலேயே வெடி வெடித்ததில் கை சிதறி அவர் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்து வந்த குமாரபாளையம் தீயணைப்பு துறையினர் லட்சுமணன் சடலத்தை தேடி வருகின்றனர். மேலும், சட்டவிரோதமாக வெடி மருந்து பயன்படுத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments