பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குவோருக்கு வருகிறது புதிய சலுகை.. மத்திய அமைச்சர்
பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு, புதிய வாகனங்களை வாங்குவோருக்கு, கூடுதல் வரிச் சலுகைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனம் சார்பில், நொய்டாவில், பழைய வாகனங்களுக்கான மறுசுழற்சி தொழிற்சாலையை, தொடங்கி வைத்து பேசுகையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பழைய வாகனங்கள் தொடர்பாக, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கொள்கையால், சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும், என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய மறுசுழற்சி ஆலைகளால், நாட்டில் காற்று மாசு குறைவதுடன், சாலைகள் பாதுகாப்பானதாக மாறும் என்றும், வாகனத் தயாரிப்புக்கான மூலப் பொருட்களின் விலை குறையும் என்றும், அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
பழைய வாகனங்களுக்கான அரசின் புதிய கொள்கை, வரும் 2023 ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி 15 ஆண்டுகளை கடந்த வர்த்தகரீதியிலான கனரக வாகனங்கள் சாலைகளில் அனுமதிக்கப்படாது.
Comments