பாலாற்று வெள்ளத்தில் சரிந்து விழுந்து அடித்துச் செல்லப்பட்ட வீடு..

0 3289
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் பாலாற்றின் கரை ஒட்டிப் பகுதியில், வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் பாலாற்றின் கரை ஒட்டிப் பகுதியில், வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

கடந்த வாரம் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், விரிஞ்சிபுரத்தின் காமராஜபுரம் பகுதியில் பாலாற்றின் கரையொட்டிய 15க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கரை ஒட்டிக் கட்டப்பட்டிருந்த கான்கிரீட் வீடுகள் பாதியாக உடைந்து, பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

வீடுகளில் குடியிருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டதால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments