பழங்குடி மக்களுடன் இணைந்து நடனமாடிய மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் செளகான்..
மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் செளகான், பழங்குடி மக்களுடன் சேர்ந்து, அவர்களது பாரம்பரிய மேளத்தை இசைத்தபடி நடனமாடியது, பலரின் கவனத்தை ஈர்த்தது.
நாட்டின் சுதந்திரப் போரட்டத்தில், பிர்சா முண்டா உள்ளிட்ட பழங்குடி தலைவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், "ஜன்ஜதிய கவுரவ் திவாஸ்" என்னும் பெயரில், விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, பழங்குடி மக்கள் வசிக்கும் மண்ட்லா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்துகொண்ட ஷிவ்ராஜ் சிங் செளகான், அப்பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார்.
மேலும், பழங்குடி மக்களுடன் இணைந்து அவர் உற்சாகமாக நடனமாடினார்.
#WATCH | Madhya Pradesh CM Shivraj Singh Chouhan plays dhol, dances with the people from a tribal community, in Mandla (22.11) pic.twitter.com/kDuVOUDISg
Comments