பேரையூர் பேருந்து நிலையத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல்.. போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் பேரையூர் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே பேரையூர் பேருந்து நிலையத்தில் கடந்த 16 ஆம் தேதி காலை தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
பேரையூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொள்வது தொடர்கதையாகி வருவதாகவும், வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments