ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தப்போவதாக வோடஃபோன், ஐடியா அறிவிப்பு

0 13090

ரும் 26 ஆம் தேதி முதல் ப்ரீபெய்ட் கட்டணம் உயர்த்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவனமும் வரும் 25-ஆம் தேதி முதல் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

அதன் படி வோடஃபோன் ஐடியாவின் மிக குறைந்த ப்ரீபெய்ட் கட்டணமான 79 ரூபாய் திட்டம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 99 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வோடஃபோன் ஐடியாவின் மிக அதிக ப்ரீபெய்ட் கட்டணமான 2 ஆயிரத்து 399 ரூபாய் திட்டம் 500 ரூபாய் உயர்த்தப்பட்டு 2 ஆயிரத்து 899 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வோடஃபோன் ஐடியாவின் மொபைல் டாப் அப் திட்டங்களுக்கான கட்டணமும் 67 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments