ஜிஎஸ்டி வரி விகித வரம்புகளை உயர்த்த, ஃபிட்மென்ட் கமிட்டி பரிந்துரை
5 சதவிகித ஜிஎஸ்டி வரி வரம்பை 7 சதவிகிதமாகவும், 18 சதவிகித வரம்பை 20 சதவிகிதமாகவும் உயர்த்தலாம் என ஜிஎஸ்டிக்கான ஃபிட்மென்ட் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
அதை போன்று 12 முதல் 18 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படுவதை ஒன்றிணைத்து அதை 17 சதவிகிதமாக நிச்சயிக்கலாம் எனவும் இந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கு தற்போது விதிக்கப்படும் 3 சதவிகித ஜிஎஸ்டியை 5 சதவிகிதமாக உயர்த்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்த இந்த பரிந்துரைகள் குறித்து வரும் 27 ஆம் தேதி நடக்க உள்ள அமைச்சர்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன்பின்னர் அந்த முடிவு அடுத்த மாதம் நடக்க உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
Comments