அண்ணா பல்கலையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - துணைவேந்தர் வேல்ராஜ்

0 9517

ண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறு மதிப்பீட்டிற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க பரிசீலிக்கப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பொறியியல் படிப்புக்கான புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த பின் பேசிய அவர், விடைத்தாள் மறு மதிப்பீட்டிற்கு ஒரு பேப்பருக்கு கட்டணமாக 700ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், இதனை குறைப்பது குறித்து குழு அமைத்து பரிசீலிக்கப்படும் எனவும் கூறினார்.

முதலாமாண்டு மாணவர்களுக்கு ஓரிரு வாரங்களில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments