கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான பயண கட்டுப்பாட்டை தளர்த்தியது பிரிட்டன் அரசு

0 2264
கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான பயண கட்டுப்பாட்டை தளர்த்தியது பிரிட்டன் அரசு

கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான பயண கட்டுப்பாட்டை பிரிட்டன் அரசு தளர்த்தியுள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அண்மையில் உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்தது.

இதனை அடுத்து அந்த தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்களுக்கு பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்திக் கொண்டவர்கள், பிரிட்டன் வரலாம் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவின் சினோவேக், சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளையும் பிரிட்டன் அரசு தங்கள் நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments