3 மாதங்களுகளை தாண்டி குமுறி வரும் எரிமலை ; தாரை தாரையாய் வெளியேறும் தீக்குழம்பு

0 2502

ஸ்பெயின் லா பால்மா தீவில் உள்ள கூம்பரே பியுகா எரிமலையில் இருந்து நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது போல தீக்குழம்பு வெளியேறி வருகிறது.

3 மாதங்களை தாண்டி எரிமலை தொடர்ந்து குமுறி வருகிறது. உள்ளூர் முழுவதும் சாம்பல் கழிவுகள் சூழ்ந்த நிலையில் தற்போது எரிமலையின் அண்டை கிராமமான லா லாகுனாவை தீக்குகுழம்பு கபளீகரம் செய்து வருகிறது.

ஏறத்தாழ 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முழுநேர முகாம்வாசிகளாகவே மாறினர். ஏறத்தாழ 260 மில்லியன் அமெரிக்க டாலர் வரை பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 ஸ்பெயினின் லா பால்மா தீவின் கும்ப்ரே வியஜா எரிமலையிலிருந்து வெளியேறும் தீப்பிழம்பு கடலில் கலந்து விஷப் புகையை வெளியிட்டு வருவதால், கடலோர நகரங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது.

எரிமலையில் மூன்றாவதாக உருவாகியுள்ள துளையிலிருந்து வெளியேறி வரும் தீப்பிழம்பு கடலில் கலந்து சல்ஃபர் டையாக்ஸைட் உள்ளிட்ட விஷ வாயுக்களை  வெளியிட்டு வருகிறது.

இதனையடுத்து Tazacorte, San Borondon மற்றும் El Cardon நகரங்களில் வாழும் மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments