கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து 26 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்றவரை கைது செய்த போலீசார்!

0 3235

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிற்கு கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து 26 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்ட போது உடைமைகள் மற்றும் உடலில் மறைத்து வைத்து பணத்தை கடத்த முயன்ற கோகுல கோடீஸ்வரன் என்பவர் கையும் களவுமாக பிடித்தனர்.

அவரிடம் இருந்து இந்திய மதிப்பிலான 26 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய், சவுதி, ஐக்கிய அரபு அமிரிகம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments