நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 28ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக, வரும் 28ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்பாக 28ம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அன்றைய தினம் நடைபெறும் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments