அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு ; வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடிய சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம், நாமக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம், வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தென் தமிழ்நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்கும் எனவும் எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரே மாதத்தில் 3-வது முறையாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
Comments