ஆப்கானில் பெண்கள் நடிக்கும் டிவி தொடர்களுக்கு தடை ; தாலிபான் அரசு

0 2795
ஆப்கானில் பெண்கள் நடிக்கும் டிவி தொடர்களுக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களில் பெண்கள் நடிக்கும் தொடர்களுக்கு தடை விதித்துள்ள தாலிபான் அரசு, தொலைக்காட்சிகளில் தோன்றும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோர் ஹிஜாப்கள் அணியவும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், மதத்தை அவமதிக்கும் வகையிலான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்றும், ஆப்கானிஸ்தானின் சட்டங்களுக்கு எதிரான படங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் நடைமுறையில் சாத்தியப்படாது என்றும் அப்படியே அமல்படுத்தினாலும், தொலைக்காட்சிகள் மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்றும் அந்நாட்டின் பத்திரிகையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் உறுப்பினர் ஹுஜ்ஜத்துல்லா தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments