"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மீண்டும் போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்க உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு
இரண்டாடண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்க சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளதை அடுத்து அந்த விமானங்கள் விரைவில் தங்களது சேவையில் இணையும் என ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.
முதல் விமானம் செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியில் இருந்து குவாலியருக்கு பறக்கும் எனவும், அந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து பயணிகளுக்கு உறுதிப்படுத்துவதற்காக, இந்த விமானத்தில் தாமும் தமது குடும்பத்தினரும், விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் செல்ல உள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்பைஸ்ஜெட்டிடம் தற்போது 13 போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் உள்ளன. மேலும் 205 விமானங்களுக்கு ஆர்டரும் வழங்கப்பட்டுள்ளது.
Comments