11-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் ; வன்கொடுமை செய்தவனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

0 4841
வன்கொடுமை செய்தவனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து 11-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ராஜ்குமார் என்பவன் தனது வீட்டருகே வசிக்கும் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளான். இதனை அடுத்து கைதான ராஜ்குமாருக்கு, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இயற்கை மரணம் வரை ஆயுள் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு சார்பில் 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கிட நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments