ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் ; முதலமைச்சர் கெஜ்ரிவால்

0 5377
ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும்

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செயதுள்ளது. இந்த நிலையில் அங்கு இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய கெஜ்ரிவால், மோகோ என்ற இடத்தில் பேசும் போது இந்த வாக்குறுதியை அளித்தார்.

ஓய்வூதியம் வாங்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் இந்த ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என கெஜ்ரிவால் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments