சாலையில் நடந்து சென்றவர் மீது மினி சரக்கு வாகனம் மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சாலையில் நடந்து சென்றவர் மீது மினி சரக்கு வாகனம் மோதியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று இந்திரா நகர் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து அருகில் இருந்த கடைக்கு ஓய்வுபெற்ற தலைமை காவலர் தேவராஜ் நடந்து சென்று கொண்டிருந்தார். சாலையோரத்தில் தேவராஜ் நடந்து சென்றபோது, எதிர்பாராத வகையில் அவர் மீது, பின்னால் வந்த டாடா ஏஸ் மினி சரக்கு வாகனம் பலமாக மோதியது.
இதில் தலையில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனத்தை அப்பகுதி மக்கள் வழிமறித்து பிடித்தனர்.
இதனை அடுத்து ஓட்டுநரான அருண் ராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
Comments