நல்ல குணத்தை கற்பிக்கும் வகையில் நவீன கல்வி இல்லை ; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா
நல்ல குணத்தை கற்பிக்கும் வகையில், தற்போதைய நவீன கல்வி இல்லை, என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் நடைபெற்ற சத்யசாய் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உண்மையான கல்வி என்பது நேர்மறை மற்றும் ஆன்மிக கருத்துகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், அப்போது தான் மாணவர்களின் சிந்தனையும் சமூக அக்கறையும் விரிவடையும் என்றும், தலைமை நீதிபதி என்.வி.ரமணா குறிப்பிட்டார்.
மேலும், மாணவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தை போதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Comments