அனுமதி பெறாத கூட்டுறவுச் சங்கங்கள் பெயருடன் வங்கி என்பதைச் சேர்க்கக் கூடாது - ரிசர்வ் வங்கி
வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின்படியும், ரிசர்வ் வங்கியிடமும் அனுமதி பெற்றவை தவிர மற்ற கூட்டுறவுச் சங்கங்கள் வங்கி, வங்கியாளர் என்பதைத் தங்கள் பெயரில் சேர்த்துக்கொள்ளக் கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி உரிமம் பெறாத கூட்டுறவுச் சங்கங்கள் தங்கள் பெயரில் வங்கி என்பதைச் சேர்த்துக்கொண்டு உறுப்பினர் அல்லாதோரிடமும் வைப்புத் தொகை பெறுவதாக ரிசர்வ் வங்கிக்குப் புகார்கள் வந்துள்ளன. இதனால் வங்கி உரிமம் பெறாத கூட்டுறவுச் சங்கங்கள் தங்கள் பெயருடன் வங்கி என்பதைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
Comments