தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும் என கனவு கண்டேன் - நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி

0 3273
தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும் என கனவு கண்டேன் - நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி

தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும் என கனவு கண்டதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றதன் மூலம் அந்த கனவு நனவாகியதாகவும் உயர்நீதிமன்ற புதிய நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக முனீஸ்வர நாத் பண்டாரி இன்று பதவியேற்றார். இதனை அடுத்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், நேற்று முதல் தமிழ் மொழியை கற்க தொடங்கியுள்ளதாகவும், வணக்கம், நன்றி ஆகியவற்றை கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

மேலும், பயமோ பாரபட்சமோ இன்றி நடுநிலையுடன் செயல்படுவேன் என்றும் புதிய நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments