நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி வரும் 26ம் தேதி திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு
நூல்விலை கடுமையாக உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தக்கோரி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திருப்பூரில் வரும் 26ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகள், தொழில் அமைப்புகள், தொழில் சங்கங்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பின்னலாடை உற்பத்திக்கு முதன்மை ஆதாரமாக விளங்கும் பருத்தி நூல் விலை கிலோ 300 முதல் 350 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
நூல் விலையை குறைப்பதற்கு பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும், பருத்தி பதுக்கலை தடுக்கவும் அரசிடம் வலியுறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments