3 தலைநகரங்கள் முடிவு வாபஸ் ; ஆந்திர அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்
மூன்று தலைநகரங்கள் என்ற திட்டத்தை கைவிடுவதாகவும், ஆந்திராவின் தலைநகராக அமராவதி மட்டுமே இருக்கும் எனவும் ஆந்திர அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் அறிவிப்பார் என ஆந்திராவின் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணியம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்காக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சர்சைக்குரிய சட்டம் வாபஸ் பெறப்படும் எனவும் அவர் கூறினார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதால் ஐதராபாத் அதன் தலைநகரானது. அதை தொடர்ந்து ஆந்திராவுக்கு அமராவதி தலைநகரமாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினமும், நீதித்துறை தலைநகராக கர்நூலும், சட்டமன்ற தலைநகராக அமராவதியும் இருக்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது.
Comments