சென்னையின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மழை ; சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

0 2158

சென்னையில் அதிகாலை முதல் பெய்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியது.தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

அதேபோல், மேற்கு மாம்பலம், தம்பையா சாலை, ஸ்ரீனிவாச தெரு, ராமகிருஷ்ணபுரம் பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். அசோக் நகர், வடபழனி 100 அடி சாலையில் மழை நீர் தேங்கியதால் வடபழனி முதல் அண்ணா நகர் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காலையில் பெய்த மழையால், கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவில் மழை நீர் தேங்கிய நிலையில் அதனை மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments