ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் மைல்கல்லில் மோதி விபத்து ; 2 பேர் பலி
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகியாதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
ஐயப்பன் கோவிலுக்கு மாலையணிந்து தரிசனம் முடித்துவிட்டு சபரிமலையிலிருந்து செவர்லெட் டவேரா வாடகை காரில் திரும்பிக்கொண்டிருந்த 6 பக்தர்கள், அதிகாலை நேரத்தில் வி.களத்தூர் பிரிவு சாலை என்ற இடத்தில் வந்தபோது, கண்ணயர்ந்த ஓட்டுநரால் மைல்கல்லில் மோதிய வாகனம் சுமார் 25 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்திலேயே செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாபு மகன் ஆனந்த், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சூர்யா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நால்வரில், வாகனம் ஓட்டிவந்த கணேசனுக்கு நெஞ்சுபகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மட்டும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments