பிரீபெய்டு கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியுள்ளது ஏர்டெல் நிறுவனம்

0 5645

பார்தி ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்டு கட்டணத்தை 20 விழுக்காடு அளவுக்கு உயர்த்தியுள்ளது.

கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள அந்த நிறுவனம் அதில் இருந்து மீள்வதற்கான முதல் நடவடிக்கை இது எனக் கூறப்படுகிறது. 79 ரூபாய் முதல் இரண்டாயிரத்து 498 ரூபாய் வரையுள்ள அனைத்துத் திட்டங்களுக்கும் 20 விழுக்காடு அளவுக்குக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு நவம்பர் 26 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

இதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர்களில் 90 விழுக்காட்டினர் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஆவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments