கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடும் உயர்வு

0 11056

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தொடர் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், மார்க்கெட்டிற்கு வரவேண்டிய 450 லாரிகளில், 200 லாரிகள் மட்டுமே வந்துள்ளன. இதன் காரணமாக கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ தக்காளி இன்று 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், கத்தரிக்காய் 40 ரூபாயில் இருந்து 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 30 ரூபாயில் இருந்து 80 ரூபாய்க்கும் , பீன்ஸ் 50 ரூபாயில் இருந்து 90 ரூபாய்க்கும் , அவரை 40 ரூபாயில் இருந்து 90 ரூபாய்க்கும், கேரட் 50 ரூபாயில் இருந்து 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 20 ரூபாய்க்கு விற்பனை ஆன கோவக்காய் 60 ரூபாய்க்கும், 60க்கு விற்பனையான சின்ன வெங்காயம் 90 ரூபாய்க்கும், 40 க்கு விற்பனை ஆன பீட்ரூட் 70 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments