பாலாற்று வெள்ளத்தில் இடிந்து விழுந்த கூலித் தொழிலாளியின் வீடு

0 3829

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, ஆற்றங்கரையோரம் இருந்த வீடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

காமராஜபுரம் பகுதியில் பாலாற்றின் கரையோரம் இருந்த கூலித்தொழிலாளி ரமேஷ் என்பவரின் கான்கிரீட் வீடு இடிந்து விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதேபோல் கேவி.குப்பம் அருகே பசுமாத்தூர் கிராமத்தில் பாலாற்றின் கரையோரம் இருந்த மாடி வீடு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு இரண்டு அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments