ரயில் தண்டவாளங்கள் அசுத்தமடைவதை தடுக்க வேண்டும் என ரயில்வேக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

0 2966

ரயில் தண்டவாளங்கள் அசுத்தமடைவதை தடுக்க வேண்டும் என ரயில்வேக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவில், ரயில் தண்டவாளங்கள் கழிப்பறையாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

குடியிருப்புகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீரை கொட்டும் இடமாக பயன்படுத்தப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. ரயில்களில் உணவு வினியோகம், துப்புரவு போன்ற பணிகளுக்கு நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள், கழிவு பொருட்களை ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் கொட்டக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments