நடிகை கங்கணாவுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும்... குடியரசுத் தலைவருக்கு சீக்கிய அமைப்பினர் கோரிக்கை
பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேசத்துரோக மற்றும் இழிவான கருத்துக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்ததாக கங்கணா மீது சீக்கிய அமைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
மேலும் விவசாயிகள், சீக்கியர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதித்ததாகவும், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தைக் குறிப்பிட்டு, கங்கணா வேண்டுமென்றே சீக்கியர்களைத் தூண்டி விடுவதாகவும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Comments