சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு: 2 சிறார்கள் உள்பட 3 பேர் கைது

0 7910

திருச்சியில் ஆடு திருடர்களை விரட்டி பிடிக்கச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரை நடுரோட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பிடிபட்டுள்ளனர். 

திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று ஆடுகளை திருடும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட பூமிநாதன் திருட்டு கும்பலை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளார்.

திருச்சி - புதுக்கோட்டை மெயின் ரோட்டில், களமாவூர் ரயில்வே கேட் அருகே பள்ளத்துப்பட்டி பகுதியில் ஒரு பைக்கை மடக்கி பிடித்து அதில் வந்தவர்களை விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் நடு ரோட்டிலேயே பூமிநாதனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, பூமிநாதன் கொலை வழக்கு தொடர்பாக, திருச்சியை அடுத்த கல்லணையைச் சேர்ந்த 2 சிறார்கள் உள்பட 3 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments